Right to Information Act 2005 Part II
தகவல் அறியும் உரிமை சட்டம் (பாகம் 2)
தகவல் அறியும் உரிமை சட்டம் பாகம் 1ன் தொடர்ச்சி.
மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட
அதிகாரி 30 நாளில்
அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த
ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த
வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற
தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம்.
இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.தகவல்
அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு
சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
உதாரணம்: தில்லியில் வசிக்கும்
குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான்.
அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை
திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ
ரூ.3 என்ற
சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
ஆனால், ஓராண்டாக
அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை
என்றே பதில் வந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும்
விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.
இதுபோன்ற
குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து
செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான்
செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.இவ்வாறு போராடி
வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து
வருகின்றன.
இதைப் போன்றே உதய்
என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.
தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில்
வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில்
போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில்
போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார்.
தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.
- அதுதொடர்பான ஆவணங்களைப்
பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின்
தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில்குறிப்பிட்டார்.
- இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த
செயல் பொறியாளர்அவரிடம் வந்து, சாலை
முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்றுஉறுதியளித்தார். அதன்
பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார்.
அவர் சுட்டிக்
காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.ஊழல், முறைகேடு இல்லாத
உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி
நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல்
அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.
Please Share it!
No comments: