Right to Information Act 2005 Part III

தகவல் அறியும் உரிமை சட்டம்  (பாகம் 3)

தகவல் அறியும் உரிமை சட்டம்  பாகம் 2ன் தொடர்ச்சி.

aPAHCA


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற தொடர்பு கொள்ள வேண்டிய மாநில அளவிலான அலுவலர்கள் பற்றி இந்த பதிவில் அறிந்துகொள்வோம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பொதுமக்கள் மனுச்செய்ய ஏதுவாக, மாநில அளவிலான அலுவலர்கள் குறித்த விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது.


 

வருவாய் நிர்வாக உதவி ஆணையர் :

  • சகலெக்டர்கள்
  • ஆர்.டி.ஓ.
  • கமிஷனர் அலுவலக பணியாளர்கள் மற்றும்
  • வி.ஏ.ஓ.,க்கள் பணி தொடர்பாக.

வருவாய் நிர்வாக உதவி ஆணையர் :

  • தாசில்தார்
  • துணைத்தாசில்தார்
  • அலுவலக உதவியாளர்கள் ஆகியோரின் பணி
  • பணியாளர் சங்க கோரிக்கை
  • மாவட்டம்,தாலுகா பிரிக்கும்போது எல்லைகளை மாற்றியமைத்தல்

வருவாய் நிர்வாக உதவி ஆணையர் :

  • கிராமஉதவியாளர்களின் பணியமைப்பு
  • வி.ஏ.ஓ.,.க்களின் ஓய்வூதியம்
  • ஆர்.டி.ஓ.,க்களின் ஓய்வூதியம்
  • அயற்பணி பார்ப்பவர்கள் மற்றும்
  • அரசிதழ் பெற்றவர்களின் ஓய்வூதியம்
  • சிறப்பு ஆணையர் மற்றும்
  • வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக பணியாளர் ஓய்வூதியம்
  • அரசு ஊழியர்களின் பிறந்ததேதி மாற்றுதல்
  • முதியோர் உதவித்தொகை திட்டம்
  •  துயர் துடைப்பு திட்டம்
  • விபத்து நிவாரணத் திட்டம்
  • முதல்வர் நிவாரணநிதி அதேபோல் உள்ள சமூகநல திட்டம் தொடர்பாக

வருவாய் நிர்வாக உதவி ஆணையர் :

  • அரசுப்பணியாளர்களின்உதவியாளர்கள்
  • இளநிலை உதவியாளர்கள் மற்றும் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களின் பணியமைப்பு மற்றும் நியமனம் குறித்து.
  • இந்த 4 உதவி ஆணையர்கள் பொது தகவல் அலுவலர்களாகவும் இவர்களுக்கு வருவாய் நிர்வாக இணை ஆணையர் மேல்முறையீட்டு அலுவலராகவும் இருப்பார்

வருவாய் நிர்வாக உதவி ஆணையர் :

  • வெள்ளம்,புயல் தொடர்பான துயர் துடைப்பு மற்றும்நிர்வாகம்
  •  தீ விபத்து மற்றும் புயலுக்கு தங்குமிடங்கள் அமைத்தல்
  • வருவாய்துறை கட்டடங்கள்
  • நில ஆர்ஜிதத்தின் போது ஈட்டுத்தொகையை அதிகப்படுத்தக் கேட்டல் தொடர்பாக.

வருவாய் நிர்வாக உதவி ஆணையர் :

  • படைக்கலசட்ட மேல்முறையீடு
  • கருவூலச் சட்டம் பிறப்பு இறப்பு சட்டம்
  • வெடிபொருள் சட்டம்
  • நச்சுவாயுச்சட்டம்
  • சமுதாய நலவருவாய்
  • நில வரிவஜா, ஜமாபந்தி, கிராம வட்ட கணக்குகள்
  • வருவாய் வசூல் சட்டம், பொதுசொத்துகளுக்கான சட்டம்,  
  • தொழிலாளர் பிரச்னைகள், அடகு கடை வட்டிக்குபணம் கொடுப்போர் சட்டம்,
  • மனுநீதிநாள் திட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள்மனு, முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள்
  • சேலைவேட்டி வழங்கல்
  • தொழிலாளர் ஆயுள்காப்பீடுதிட்டம் தொடர்பாக.

முதன்மை கணக்கு அலுவலர் :

  • திட்டமதிப்பீடுகள், பொதுக்கணக்கு குழு,
  • மாநில நிர்வாக அறிக்கை, கூட்டுறவு கடன்கள்,
  • கால்நடைகள், உரங்கள் வழங்கல் திட்டம் தொடர்பாக.

இந்த 3 பேரும் பொதுதகவல் அலுவலர்களாகவும், இவர்களுக்கு நிலநிர்வாக இணை ஆணையர் மேல்முறையீட்டு அலுவலராகவும் இருப்பார். 

  • சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல் தொடர்பாக உதவி ஆணையர்(ஆர்.ஆர்), உதவி ஆணையர்(டி.எம்.ஆர்) உதவி கணக்கு அலுவலர்(சுனாமி) ஆகியோர் பொதுதகவல் அலுவலர்களாகவும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு இணை ஆணையர் மேல்முறையீட்டு அலுவலராகவும் இருப்பர்.

  • வறட்சி நிவாரணம், யு.என்.டி.பிடி.ஆர்.எம்.பி துயர்துடைப்பு நிர்வாகம் தொடர்பாக உதவி ஆணையர் 5,முதன்மை கணக்கு அலுவலர் ஆகியோர் பொது தகவல் அலுவலராகவும், இணை ஆணையர்(டி.எம்.எம்) ஆகியோர் மேல்முறையீட்டு அலுவலராகவும் இருப்பர். பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை எந்தெந்த துறையினரிடம் பெற வேண்டும் என்பதைதெரிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனுச்செய்து பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு கீழே சொடுக்கம்:

RTI Rules And Requlation  : DOWNLOAD

தகவல் அறியும் உரிமை சட்டம்  (பாகம் I)     

தகவல் அறியும் உரிமை சட்டம்  (பாகம் II)

 

Please Share it!

No comments: